ராணிப்பேட்டையில் 70 வயது மூதாட்டியின் கம்மலை காதோடு அறுத்து சென்ற மர்ம கும்பல் . ராணிப்பேட்டை அகராவரம் மலைமேடு பகதியில் மின்சாரம் தடைப்பட்ட நேரத்தில் வீட்டிற்குள் புகுந்து மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்றுள்ளனர் அந்த கும்பல். வீட்டிலிருந்து மூதாட்டி வௌியே வராததால் சந்தேகமடைந்த அக்கம்பத்தினர் உள்ளே சென்று பார்த்தபொழுது மூதாட்டி மயக்கமடைந்து கீழே கிடந்துள்ளார். உடனடியாக அக்கம்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மூதாட்டிக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

