Skip to content

பஸ்சில் பெண்ணிடம் ரூ. 1.90 லட்சம் பணம் மர்ம நபர் கைவரிசை

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி சித்திரைகனி (40). இவர் நேற்று தனது குடும்ப தேவைக்காக அரசூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகையை ரூ.1.90 லட்சத்துக்கு அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.
பின்னர் அந்த பணத்தை துணிப்பையில் வைத்துக்கொண்டு திசையன்விளைக்கு புறப்பட்டார். உடன்குடியில் இருந்து திசையன்விளைக்கு சென்ற அரசு டவுன் பஸ்சில் ஏறி சென்றார். அப்போது பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சித்திரைகனி நின்றவாறு பயணித்தார்.
திசையன்விளைக்கு சென்றதும் பஸ்சில் இருந்து சித்திரைகனி கீழே இறங்கியுள்ளார். அப்போது அவர் தனது துணிப்பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ.1.90 லட்சம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளரா். பஸ்சில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மர்மநபர் பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!