பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் துணிக்கடையில் தகர சீட்டு கட் பண்ணி உள்ளே இறங்கி தூங்கி விட்டு பணத்தை திருடி சென்ற நபரால் பரபரப்பு. பொள்ளாச்சி-அக்-23 பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் செல்போன் கடை ஜூஸ் கடை செருப்பு கடை துணிக்கடை என கடைகள் 20க்கும் மேற்பட்ட உள்ளது கடந்த தீபாவளி அன்று அப்பகுதியில் நள்ளிரவு வரை வியாபாரம் நடைபெற்றது தொடர் மழை பெய்து வந்ததால் அப்பகுதியில் துணிக்கடை நடத்த வரும் ஜபரான் தனது கடையை பூட்டிவிட்டு சென்றுவிட்டார் காலை வந்து பார்த்த பொழுது கடையின் மேல் புறம் தகர சீட் கட் செய்யப்பட்டு உள்ளே புகுந்த மர்ம நபர் வெளியில் மழை பெய்து வந்ததால் தூங்கிவிட்டு தீபாவளி செலவுக்கு ரூபாய் கடையில் இருந்த 15,000 பணத்தை எடுத்துச் சென்றுள்ளது தெரியவந்தது இதை அடுத்து கடை உரிமையாளர் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனா பிரியா தலைமையில் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராங்களை ஆய்வு செய்து வருகின்றனர் மேலும் நேற்று ஒருவர் செல்போன் கடையில் மொபைல் ஒன்று திருடி சென்றுள்ளார் போலீசார் கூறுகையில் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் காவலர் அறையில் எஸ் எஸ் ஐ ஒருவர் இரண்டு காவலர்கள் பணியில் இருந்து வருகின்றனர் என போலீசார் தெரிவித்தனர் தீபாவளி திருநாள் என்பதால் இந்த திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது இது குறித்து தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம நம்பரை தேடி வருகிறோம் என தெரிவித்தனர் கடையில் சீட்டை உடைத்து தூங்கி பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது .
பொள்ளாச்சி துணிக்கடையில் திருடி சென்ற மர்ம நபர்… பரபரப்பு
- by Authour
