Skip to content

பட்டுக்கோட்டை ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாகோட்டை ரயில்வே தண்டவாளத்தில்  இன்று காலை  45 வயது மதிக்கத்தக்கவர் அமர்ந்திருந்தார் .அப்போது திருவாரூரில் இருந்து டெமோ ரயில் வந்து கொண்டிருந்தது ஆரன் ஓசை எழுப்பப்பட்டது ,தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்  எழுந்து  நடந்தார்.

அதற்குள் ரயில் வேகமாக வந்து அவர் மீது  மோதியது. இதில்  அவர்  சம்பவ இடத்திலேயே  இறந்துவிட்டார். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் பட்டுக்கோட்டை ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே  சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இசையரசன் , ஜெகதீஸ்வரன் ஆகியோர் சம்பவ இடத்தைச்  வந்து விசாரணை மேற்கொண்டு இறந்து போனவர் யார் என்று விசாரிக்கிறார்கள்.   இறந்தவர் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

error: Content is protected !!