திருச்சி நம்பர்-1 டோல்கேட்டில் இருந்து லால்குடி செல்லும் சாலையில், மேலவாளாடி பகுதியில் லால்குடி நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த அரசு பேருந்து இன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருசக்கர வாகனத்தில் வந்தவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நம்பர்1 டோல்கேட் போலீசார் வழக்குபதிவ செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

