Skip to content

திருச்சி ஜிஎச்-ல் சிகிச்சை பெற்று வந்த நபர் திடீர் மாயம்…

திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர் திடீர் மாயம் ..

கோயம்புத்தூர் மாவட்டம் தேமாந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் இருளமுத்து (வயது 48)இவருக்கு திருமணமாகி மனைவி குழந்தை உள்ளனர். இந்த நிலையில் இவர் மனைவியிடம் விவாகரத்து பெற்று நாமக்கலில் தனியாக தங்கி இருந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்து ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் திடீரென்று அரசு மருத்துவமனை வார்டில் இருந்து வெளியே சென்று விட்டார் பல இடங்களில் தேடிப் பார்த்தும் எங்கும் கிடைக்க வில்லை. இது தொடர்பாக அவரது அக்கா பாப்பா திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருளமுத்துவை தேடி வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் செப்பு குழாயை திருடிய வாலிபர் கைது…

ஸ்ரீரங்கம் ,அம்மாமண்டபம் ரோடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு விட்டில் ஒரு பெண் வசித்து வருகிறார். அவரது விட்டில் உள்ள ஏசியை அவர் ஆன் செய்த போது அது வேலை செய்யவில்லை. பிறகு அதனை சோதனை செய்து பார்த்த பிறகு செப்புக் குழாய் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.இது தொடர்பாக தகவல் தெரிந்து அந்த அடுக்குமாடி குடியிருப்பு தலைவர் சிவக்குமார் என்பவர் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரி பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து ஏசி செப்பு குழாயை திருடியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்திய போது கீதாபுரத்தை சேர்ந்த விக்னேஷ் குமார் (வயது 34) என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் விக்னேஷ்யை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!