Skip to content

முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் வேண்டும்- எம்பி கனிமொழியிடம் மனு

தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் தர்மலிங்கம் தலைமையில் குழுவினர் தி.மு.க. தேர்தல் அறிக்கை கருத்து கேட்டு கூட்டத்தில் கனிமொழி எம்.பி.யிடம் ஒரு மனு அளித்தனர். அதில் பி.சி.ஆர். சட்டம் போன்று முடி திருத்தும் தொழிலாளர்களுக்கு தனிச் சட்டம் நிறைவேற்ற வேண்டும். மேலும் விவசாயம் நெசவு தொழிலுக்கு அளிப்பது போன்று முடி திருத்தும் சிறு கடைகளுக்கு மின் கட்டண சலுகை அளிப்பதோடு, முடி திருத்தும் கடைகளுக்கு உரிமம் பெற சிறு கடைகளுக்கு ரூ.200, பெரிய கடைகளுக்கு ரூ
500 என தமிழகம் முழுவதும் சீராக கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். கார்ப்பரேட் சலூன் கடைகளின் ஆதிக்கத்தினால் 10 ஆயிரம் முடி திருத்தும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே அதற்கான அனுமதிகளை கட்டுப்படுத்த வேண்டும். பாரம்பரியமாக மருத்துவத் தொழில் செய்து வந்த முடி திருத்தும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சித்த மருத்துவ கல்லூரிகளில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனு அளித்த போது குழுவின் துணைத் தலைவர் ஆழ்வார் தோப்பு கோபி, இளைஞர் அணி அமைப்பாளர் சரவணகுமார், ஒருங்கிணைந்த முகநூல் அமைப்பாளர் கோர்ட் சுப்பிரமணியன், எடமலைப்பட்டி புதூர் ராஜா மற்றும் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!