கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் டாப்ஸ்லிப் உலாந்தி வனச்சரகம் பகுதிகளில் தொடர் கனமழை காரணமாக வனவிலங்குகள் நீர்நிலைகள் பகுதிகளில் இடம்பெயர்ந்து வருகின்றனர் டாப்ஸ்லிப் பரம்பிக்குளம் செல்லும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தாமல் செல்ல வேண்டும் வனவிலங்குகள் கண்டால் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பது தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றனர் இந்நிலையில் டாப்ஸ்லிப் குடும்பத்துடன் சுற்றுலா பயணி காரில் சென்றுள்ளார் டாப்ஸ்லிப்
தாண்டி பரம்பிக்குளம் செல்லும் வழியில் தூணக்கடவு டேம் அருகே உள்ள வனப்பகுதியில் தாய் யானை குட்டியுடன் மேச்சலில் ஈடுபட்டு வந்தது சுற்றுலா பயணிகள் சென்ற கார் யானை அருகே சென்ற பொழுது யானை எதிர்பாராத விதமாக காரைத் தாக்க வந்தது இதை காரில் இருந்தவர்கள் வீடியோ எடுத்து உள்ளனர் தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது குட்டி யானை காப்பாற்ற தாயினை வேகமாக பிளரியபடி வந்தது பாசத்தை காட்டுகிறது