சென்னை மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் பல்கலைக்கழகம் விவசாய பயன்பாட்டுக்கான அதிநவீன பிரோன்களை தயாரித்துள்ளன. எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் ஏரோஸ்பேஸ் மற்றும் பென்ஸ் டெக்னாலஜி நிறுவனம் இணைந்து மூன்று வருட ஆராய்ச்சிக்கு பின்னர் இந்த ட்ரோனை உருவாக்கியுள்ளனர். இந்த ட்ரோன் எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் ஏசி சண்முகம் மற்றும் எம்ஜிஆர் பல்கலைக்கழக தலைவர் அருண்குமார்
ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. விவசாய பயிர்கள் மீது பூச்சிக்கொல்லிகளை தெளிப்பதற்கான NAI AGRO DRONE சான்றிதழ் இந்த ட்ரோனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்த ட்ரோனின் மூலம் ஒரு ஏக்கர் விவசாய நிலத்திற்கு மூன்று நிமிடங்களில் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரம் தெளிக்க முடியும். அத்துடன் 10 லிட்டர் கொள்ளளவு வரை சுமந்து செல்லும் வசதி கொண்ட இந்த ட்ரோனால் மூன்று நிமிடங்களில் ஒரு ஏக்கர் நிலத்திற்கு விதைகளை நடவு செய்ய இயலும். இதனை இயக்குவதற்கு விதிமுறைகளின் படி உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். ட்ரோன் வெளியிடப்பட்ட நிலையில் மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயிகள் 20 டோன்களை முன்பதிவு செய்துள்ளது. இதுதவிர இந்திய ராணுவத்திற்கு ஏற்றது போல இந்த ட்ரோனை வடிவமைத்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ட்ரோன்களை இயக்குவதற்கு ராணுவ வீரர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது.