Skip to content

கரூர் அருகே மழையில் சாய்ந்த நிழற்குடை.. பெரும் விபத்து தவிர்ப்பு..

கரூர் அருகே சுங்கச்சாவடி சார்பில் அமைக்கப்பட்ட நிழற்குடை மழையின் காரணமாக சாய்ந்தது விபத்துக்குள்ளானது: நிழற்குடை பின் பக்கமாக சாய்ந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. இந்த நிலையில் கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மணவாசி சுங்கச்சாவடி சார்பில் அமைக்கப்பட்ட மாயனூர் பேருந்து நிழற்குடை அரை மணி நேரம் பெய்த மழைக்கே குறைந்த அளவு காற்றிற்கே சாய்ந்தது விபத்துக்குள்ளானது.

இரும்பு கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை காற்றின் காரணமாக பின்பக்கமாக சாய்ந்ததால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். பின் பக்கமாக சாய்ந்ததால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை, இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தரமற்ற முறையில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு.

error: Content is protected !!