கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணை மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. தமிழக சுற்றுலா தளங்களில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த 120அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணையை காண தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். தற்போது மேற்கு

தொடர்சி மலை பகுதியில் பனிமூட்டம் அதிகளவில் காணப்படுவதால் அடிவாரத்தில் அமைந்துள்ள ஆழியார் அணையின் மேல் பரப்பில் உள்ள தண்ணீரை தழுவிய படி பணி படர்ந்து செல்வதும்,

கண்ணாடி போல மலையின் பிம்பத்தை பிரதிபலிக்கும் தண்ணீர், மலை மாடுகளை மேகங்கள் கடந்து செல்லு காட்சிகள் அப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாகவே அமைகிறது.

