Skip to content

திருச்சி அருகே நாய் குறுக்கே வந்ததால் வாலிபர் படுகாயம்…

சாலையில் நாய் குறுக்கே வருவதால் கடுமையான விபத்துகள் ஏற்படுகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுவதாலும், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல்  மோதல்கள் ஏற்படுகிறது. இதில் விபத்துகள் உயிரிழப்புகள், அல்லது படுங்காயம் ஏற்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் திருச்சி , ஜீயபுரம் அருகே நாய் குறுக்கே வந்ததால், கிருஷ்ணமூர்த்தி என்ற வாலிபர் நாய் மீது மோதாமல் இருக்க டூவீலரை திருப்பும் போது, கீழே விழுந்து படுங்காயம் அடைந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.  உடனடியாக அருகில் இருந்தவர்கள் கிருஷ்ணமூர்த்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் தெருநாய்களை கட்டுப்படுத்தக்கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!