திருச்சி ரயில் நிலையத்தில் நடைபெற்ற செல்போன் திருட்டு மற்றும் நகை திருட்டு சம்பந்தமாக திருச்சி இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் ராஜன் உத்தரவின் பேரில் காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி மேற்பார்வையில்உதவி ஆய்வாளர் திருமலை ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு திருடர்களை தேடிவந்தனா.
கடந்த 3ம் தேதி திருச்சி ரயில் நிலைய நடைமேடை, எண் 8ல் கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்றவரை சுற்றி வளைத்து பிடித்த ரயில்வே போலீசார், அந்த நபரிடம் விசாரித்ததில் தனது பெயர் ஆல்வின் குமார் வயது 34 , திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி என்றும் பழைய குற்றத்தை ஒப்புக்கொண்டவரிடம் 5 செல்போன்கள்,4 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 1030 ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஆல்வின் குமாரை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.