திருப்பத்தூர் டார்லிங் ஷோரூமில் வாங்கிய ஏசி சரியாக இயங்கவில்லை கடையின் முன்பு பாதிக்கப்பட்டவர் தர்ணா
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வெங்கடேஸ்வரா நகர் பகுதியைச் சேர்ந்த ரமணன் மகள் ஜெயலட்சுமி (47) என்பவர் ப.உ.ச நகரில் செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான டார்லிங் ஷோரூமில் கடந்த ஏப்ரல் 18ம் தேதி 37 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கம்பெனி ஏசி ஒன்றை வாங்கியுள்ளார்.
19ஆம் தேதி ஏசியை வீட்டில் பிட்டிங் செய்துள்ளனர் இருப்பினும் ஏசி சரிவர இயங்கவில்லை என தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஷோரூம் ஊழியர்களிடம் பலமுறை சரி செய்து தர கோரி ஜெயலட்சுமி பேசியுள்ளார்.
மேலும் இந்நாள் சாக்குப் போக்கு சொல்லிக்கொண்டு ஷோரூம் ஊழியர்கள் ஜெயலட்சுமி அழைக்களித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இன்று ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி மற்றும் அவரது மகன் ரோகித்(24) இருவரும் கடையின் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த திருப்பத்தூர் கிராமிய போலீசார்
ஜெயலட்சுமியிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஏசியை மாற்றி கொடுக்குமாறு ஷோரூம் மேனேஜரிடம் போலீசார் அறிவுரைகளை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

