கடலூர் சிப்காட் பகுதியில் இயங்கி வரும் பூச்சிமருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 93 பேருக்கு வாந்தி, மயக்கம், தலைசுற்றல் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில், அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் இன்று மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உயர்மட்ட குழு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் தொழிற்சாலை பாதுகாப்பு துறையினர் மற்றும் மாவட்ட வருவாய்த்துறையினர் இணைந்து ஆய்வு நடத்தினர்.
இதன் பிறகு கடலூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக்கூட்டம் தற்போது நிறைவடைந்த நிலையில், கடலூர் மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் சுற்றுச்சூழல் பொறியாளர் ஆகிய 2 அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.