Skip to content

வந்தே பாரத் ரயிலில் சசி தரூரை வியக்க வைத்த 16 வயது மாணவன்!

காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெளியிட்டுள்ள அறிக்கை: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது, ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனைகளை செய்து வரும் 16 வயது ரவுல் ஜான் அஜூவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும் செயற்கை நுண்ணறிவு எல்லைகளைக் கடந்து, மிக முக்கியமாக, நமது பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் வட்டார மொழிகளில் பேச வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் பேசினோம்.

வந்தே பாரத் ரயிலில் ஏற்படும் சந்திப்புகள் பெரும்பாலும் இனிமையானவையாக இருக்கும். ஆனால் இந்த நிகழ்வு மிகவும் அரிதானது. ராகுலும் அவரது குழுவும் ஏற்கனவே மலையாளம், ஹிந்தி மற்றும் உருது மொழிகளில் குரல் செயலாக்கம் செய்யக்கூடிய அமைப்புகளை உருவாக்கி வருகின்றனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

நம் இளைஞர்களிடம் இத்தகைய புத்திசாலித்தனத்தையும் உத்வேகத்தையும் காண்பது, இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலம் மீது எனக்கு மகத்தான நம்பிக்கையை அளிக்கிறது. ராகுலுக்கும் அவரது குழுவினருக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகிறேன். அவரைப் போன்ற இளம் மனங்கள்தான் இந்தியாவின் 21ம் நூற்றாண்டு வளர்ச்சிப் பயணத்தை முடிவு செய்ய போகின்றன. இவ்வாறு சசி தரூர் கூறியுள்ளார்.

error: Content is protected !!