புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா நமணசமுத்திரம் போலீஸ்நிலையத்தில்ஏட்டு ஆக பணிபுரிபவர் சதீஷ்(40). இவர் நேற்று பணிமுடிந்து நமணசமுத்திரம் திருவப்பூர் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்றபோது மழை பெய்துள்ளது. அப்போது அகரப்பட்டி விளக்கில் திரும்பியபோது பைக் ரோட்டில் வழுக்கி சரிந்தது. இதில் சதீஷ் தலையில் பலத்த அடிபட்டு சம்பவஇடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். தகவல் அறிந்த போலீஸ் எஸ்.பி அபிஷேக் குப்தா, டிஎஸ்பி அப்துல்ரகிமான், ஆகியோர் சென்று பார்வையிட்டனர். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே விபத்து….நமுனசமுத்திரம் காவல் நிலைய தலைமை காவலர் உயிரிழப்பு…
- by Authour
