நடிகர் தனுஷ், தமிழ்த்திரையுலகில் பிரபலமாக உள்ளார். இவரது படங்களும் வெற்றிப்படங்களாக அமைகின்றன. தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள தனுஷ், பரபரப்பு, கிசுகிசுகளுக்கும் பஞ்சமில்லாதவர். ரஜினி மகள் ஜஸ்வா்யாவை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 மகன்கள். இந்த நிலையில் டைவர்ஸ் ஆனது.
தமிழ்த்திரை உலகில் எந்த கதாநாயகி அறிமுகமானாலும், அவருடன் தனுஷை இணைத்து பேசும் நிலை தான் நீடித்து வருகிறது.இப்போது தமிழ்ப்படத்தில் அறிமுகம் ஆகாத ஒரு நடிகையுடன் தனுஷ் தொடர்பில் இருப்பதாகவும், இருவருக்கும் காதல் முற்றி விட்டதாகவும் மும்பை ஊடகங்கள் ஊதித்தள்ளுகின்றன. தனுஷ் புகழ் மும்பை வரை பரவி விட்டது.
அந்த நடிகையின் பெயர் மிருணாள் தாக்குர். அவரை தனுஷ் காதலித்து வருவதாக மும்பை ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கிறது. இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், தமிழில் நேரடி படங்களில் நடிக்கவில்லை. மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியான ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்களின் மூலம் தமிழிலும் அறிமுகமாகி உள்ளார்.
இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வரும் அவர், கடந்த 1-ம் தேதி மும்பையில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பார்ட்டியில் பல நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். தனுஷும் கலந்துகொண்டார். தனுஷ் கையை பிடித்துக் கொண்டு மிருணாள் தாக்குர் அவரிடம் ஏதோ சொல்வது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.