Skip to content

நடிகர் தனுஷூக்கு ரூ. 1 கோடி கேட்டு நோட்டீஸ்

நடிகர் தனுஷுக்கு  பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில்  வழக்கறிஞர்  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

கடந்த 2016ம் ஆண்டு நான் ருத்ரன் என்ற படத்திற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அந்த படத்துக்கு பதில், வேறு படத்தை நடித்து இயக்கி தருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அதை ஏற்று, தனுஷ் உள்பட படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு  முன்பணம், பிற செலவினங்களுக்காக,  20 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில், தனுஷ் முழுமையான திரைக்கதையை வழங்காமல், பிற படங்களுக்கு கால்ஷீட்டுகளை  கொடுத்ததாலும் இந்தப் படம் பாதியிலேயே முடங்கியதாகக் கூறி, தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில்,  2025ம் ஆண்டு இறுதியில்  கால்ஷீட் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைவில் முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், 20 கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும். அத்துடன் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். இல்லாவிட்டல் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. கடந்த 2025 ம் ஆண்டு டிசம்பர் மாதம் அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸ் தற்போது வெளியாகியுள்ளது.

error: Content is protected !!