Skip to content

நடிகர் விஜய் அரசியல் வருகை.. நான் சிந்திக்கவில்லை.. திருச்சியில் நடிகர் அருண்பாண்டியன் பேட்டி

நடிகர் விஜய் அரசியல் வருகை பற்றி நான் சிந்திக்கவில்லை ; போதைப் பொருள் பயன்படுத்துவது யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் – நடிகரும் தயாரிப்பாளர் ஆன அருண்பாண்டியன் திருச்சியில் பேட்டி.

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் தயாரிப்பில் “அஃகேனம்” திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது இந்த திரைப்படத்தில் அருண் பாண்டியன் அவரது இளைய மகள் கீர்த்தி பாண்டியன் ஆதித்யா சிவ்பிங்க் ஆகியோர் நடித்துள்ளனர். பின்னணியில் இந்த படக்குழுவினர் திருச்சி தெப்பக்குளம் அருகே உள்ள மாரிஸ் திரையரங்கில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகர் அருண் பாண்டியன் கூறும் போது..,

குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாக இந்த அக்கேனம் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இளைய தலைமுறைக்கு வழிவிடும் நோக்கில் இளைஞர் இயக்க வேண்டும் என நினைத்தேன். நல்லது செய்றவங்க, அதுக்கு கேட்டது செய்றவங்க டபுள் அஹ் இருப்பாங்க. படம் குறித்து தவறாக சொல்லும் நோக்கில் நான் நடந்துகொண்டது இல்லை. புது இயக்குனர் என்று இல்லை கதைக்காக தான் இயக்குனர். நாங்கள் வரும்போது எங்களை யாரும் மதிக்கவில்லை. நடிகர் சங்கம் குறித்து பேச யாரும் இல்லை, அரசியல் கடினமானது தினமும் பொய் சொல்ல வேண்டும். அரசியலை பற்றி சிந்திக்கும் எண்ணம் இல்லை. நம்ம குதிக்கவில்லை எவனாவது தள்ளி விடுகிறான்..தற்போது அரசியல் பற்றி சிந்திப்பதே இல்லை. போதை என்பது தப்புதான் யாராக இருந்தாலும். நடிகராக இருந்தாலும் சாதாரண மனிதனாக இருந்தாலும் போதை தவறுதான் அதை இந்த படத்திலேயே சொல்லி இருக்கிறேன்.

விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து நான் யோசிக்கவே இல்லையே அதனால் அதை பத்தி பேச வேண்டாம். அவர் வேலையை செய்து கொண்டிருக்கிறார். இணைந்த கைகள் வேறொரு ரூபத்தில் செய்யலாம் இந்த வயதில் ஆக்சன் செய்ய முடியாது. என்றார். படத்தின் நடிகை கீர்த்தி பாண்டியன் கூறும் போது.., திரைத்துறைக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வரவில்லை 2015 ஆம் ஆண்டு முதல் மேடை நாடகங்களில் நடித்து இருக்கிறேன். அதன் ஈர்ப்பு காரணமாக தற்போது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தொடர்ந்து காதல் படங்கள் ஆக்சன் உள்ளிட்டவைகளில் நடிக்க இருக்கிறேன் என்றார்.

error: Content is protected !!