வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நடிகர் சங்க கட்டிடம் திறக்கப்படும் என சங்கத்தின் செயலாளரும் நடிகருமான விஷால் தெரிவித்தார். சென்னையில் நடிகர் விஷால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: தென்னிந்திய நடிகர் சங்க புதிய கட்டட திறப்பு விழா ஆகஸ்ட்15ம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் நடிகர் சங்க கட்டடம் திறப்புவிழா நடைபெறும்.
நடிகர் சங்க புதிய கட்டட பணிகள் ஜூலையில் நிறைவடையும். நீங்கள் (துணை நடிகர்கள்) அனைவரும் வர வேண்டும். வாழ்த்த வேண்டும். அதன்பிறகுதான் எனது திருமண விழா. அது உங்களுடைய கட்டிடம். நடிகர் சங்கம் கட்டடம் மட்டும் அல்ல, ஒட்டுமொத்த சினிமா இண்டஸ்ட்ரிக்காக கட்டப்பட்ட கட்டடம். அம்மாக்கள், பெரியவர்கள் சிரித்த முகத்துடன் வர வேண்டும். வாசலில் நான் நிற்பேன் என்றார்.