நடிகை அசின் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர். இங்கிருந்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கும் தனது சாம்ராஜ்ஜியத்தி விரிவுப்படுத்தினார். ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவர்; தனது கரியர் உச்சத்தில் இருக்கும்போதே மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இந்நிலையில் அசினின் வீட்டில் கோலாகலமாக விசேஷம் நடந்திருக்கிறது.
கேரளாவை சேர்ந்த அசின் தமிழில் தனது திரை பயணத்தை எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஆரம்பித்தார். முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தொடர்ந்து அவர் நடித்த உள்ளம்

கேட்குமே படமும் ஓரளவுக்கு நல்ல அடையாளத்தை அவருக்கு பெற்றுக்கொடுத்தது. இப்படிப்பட்ட சூழலில்தான் சூர்யாவுக்கு ஜோடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கஜினி படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதில் அவர் ஏற்றிருந்த கல்பனா கதாபாத்திரம் இன்றுவரை யாராலும் செய்ய முடியாதது.
முன்னணி ஹீரோக்களுடன்: கஜினி படத்தின் மெகா வெற்றி அசினின் மார்க்கெட்டை தமிழில் உச்சத்துக்கு கொண்டு சென்றது. விஜய், அஜித், விக்ரம் என டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அவர் அப்படி நடித்த சிவகாசி, வரலாறு என பெரும்பாலான படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர்

ஆகின. இதன் காரணமாக கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறிய அவர்; இங்கிருந்து பாலிவுட்டுக்கும் செல்ல முடிவெடுத்து கஜினி ஹிந்தி ரீமேக்கில் நடித்தார்.
அங்கும் டாப்தான்: ஹிந்தியில் அசின் தாக்குப்பிடித்து விடுவாரா என பலரும் யோசித்த சூழலில்; பாலிவுட்டிலும் அசினின் கொடி உயர பறந்தது. அமீர் கான், சல்மான் கான், அக்ஷய் குமார் என அங்கும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியானார். தமிழில் அவர் கடைசியாக காவலன் படத்தில்தான் நடித்திருந்தார். அப்படமும் சூப்பர் ஹிட்டாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு பிறகு முழுக்க முழுக்க ஹிந்தி நடிகையாகவே மாறிவிட்டார் அவர்.
திருமணம்: அசினின் கரியர் ஹிந்தியில் பீக்கில் சென்றுகொண்டிருந்தது. அப்போது மைக்ரோமேக்ஸ் ஓனர் ராகுல் ஷர்மாவை அக்ஷய் குமார் மூலமாக சந்தித்தார் அசின். அப்போது ஆரம்பித்த அவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்தக் காதலுக்கு வீட்டு சம்மதம் கிடைத்ததை அடுத்து; கடந்த 2016ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. கரியர் பீக்கில் இருந்தபோதே அசின் திருமணம் செய்துகொண்டது ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையையும் ஆச்சரியத்தில்தான் ஆழ்த்தியது. இப்போதும் அசின் பிஸிதான்: திருமணத்துக்கு பிறகு மொத்தமாக சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டார். ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்தார். முழுக்க முழுக்க குழந்தையை வளர்ப்பது, வீட்டை நிர்வகிப்பது, கணவரின் தொழிலுக்கு உதவியாக இருப்பது என இப்போதும் அசின் பிஸிதான். அதேசமயம் அதிகம் கேமராவுக்கு முன்பு வருவதையும் தவிர்த்துவருகிறார். இப்படிப்பட்ட சூழலில்தான் நேற்று ராகுல் – அசினின் பத்தாவது திருமண நாள் வந்தது.
வீட்டில் விசேஷம்: அதனையொட்டி அசினின் லேட்டஸ்ட் புகைப்படத்தை ராகுல் பகிர்ந்திருந்தார். அது இணையத்தில் சென்சேஷனல் ஆனது. இது ஒருபக்கம் இருக்க தங்களது பத்தாவது திருமண நாளை ராகுலும், அசினும் சேர்ந்து பிரமாண்டமாக விழா போல் கொண்டாடியிருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை பரிமாறிக்கொண்டதாக தெரிகிறது. மேலும் அசினை பார்த்து ராகுல் காதலோடு பாடலும் பாடினார். அதுதொடர்பான வீடியோவை அசின் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

