Skip to content

நடிகர் விஷால், சாய் தன்ஷிகா திருமணம்

விழுப்புரம் அருகே உள்ள கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம்  விழா நடந்தது. இதில்  சிறப்பு அழைப்பாளராக  நடிகர் விஷால் பங்கேற்றார். அப்போது அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.  அப்போது அவரை  ஒரு நடிகை தான் அருகில் இருந்து கவனித்து கொண்டாராம்.

இந்த நடிகையை கடந்த சில மாதங்களாக  விஷால் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை பல நடிகைகளை காதலித்து வந்ததாக கூறப்பட்ட விஷால் இப்போது  சாய் தன்ஷிகா  என்பவரைத்தான் காதலித்து வருகிறாராம். அவர் தான்  மருத்துவமனையில் விஷாலை கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டவர்.

.‘கபாலி’, ‘பேராண்மை’, ‘பரதேசி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விசாரித்தபோது, சில மாதங்களாக விஷால் – சாய் தன்ஷிகா காதலித்து வருகிறார்கள். நட்பாக பேசத் தொடங்கி, பின்பு காதலாக மாறிவிட்டது. ஆகஸ்ட்டில் நடிகர் சங்க கட்டிடம் திறந்தவுடன், அந்த மாத இறுதி அல்லது செப்டம்பரில் இருவருக்கும் திருமணம் நடைபெறும் என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை சாய் தன்ஷிகா நடித்துள்ள ‘யோகிடா’ படத்தின் விழா நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக விஷால் கலந்து கொள்ளவுள்ளார். இந்த விழாவில் இருவரது காதல் மற்றும் திருமணம் குறித்த அறிவிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

error: Content is protected !!