கதிர் இயக்கிய ‘காதல் தேசம்’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அப்பாஸ். தொடர்ந்து, விஐபி, பிரியா ஓ பிரியா, பூச்சூடவா, ஜாலி, ஆசைத்தம்பி, ஆனந்தம், பம்மல் கே சம்மந்தம் என பல படங்களில் நடித்தார். தமிழ் தவிர வேறு பல மொழி படங்களிலும் நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்பு முற்றிலும் இல்லாமல் போனது.
பத்து வருடங்களுக்கு முன் அவர் சினிமாவை விட்டுவிட்டு நியூசிலாந்து சென்ற அவர் அங்கு மெக்கானிக் தொழில் செய்து வந்தார், இப்போது மீண்டும் நடிப்புக்குத் திரும்பி இருக்கிறார். அவர், ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இதை பியாண்ட் பிக்சர்ஸ் மூலம் ஜெயவர்த்தனன் தயாரிக்க, ஜெய்காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்கிறார். மரியா ராஜா இளஞ்செழியன் இயக்குகிறார். .
அப்பாஸ் என்ன கேரக்டரில் நடிக்கிறார் என்பதை இப்போது சொல்ல இயலாது. அவருடைய கம்பேக் சரியானதாக இருக்கும். இது முழுமையான பொழுது போக்கு படம்” என்று இந்த படத்தின் இயக்குனர் ராஜா இளஞ்செழியன் கூறினார். 2014ல் அப்பாஸ் கடைசியாக நடித்தார். 11 வருடங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.