பாலியல் வன்கொடுமைகளை தடுக்க கோரி, தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே இன்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சாவூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளரும், ஒரத்தநாடு பேரூராட்சி மன்ற தலைவருமான மா.சேகர் வரவேற்றார். அமைப்புச் செயலாளர்கள் ஆர் காந்தி, துரை செந்தில், கிழக்கு மாவட்ட செயலாளர் பாரதி மோகன், மேற்கு மாவட்ட செயலாளர் ரத்தினசாமி, தெற்கு மாவட்ட செயலாளர் சிவி சேகர், மாநகர செயலாளர் என் எஸ் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை அறிவித்து சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்.பி,உதயகுமார் கண்டன உரையாற்றினார். கொள்கை பரப்பு துணைச் செயலாளர் துரை. திருஞானம், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் துரை,வீரணன், அம்மா பேரவை இணைச் செயலாளர் அறிவுடை நம்பி, விவசாய பிரிவு செயலாளர் ராஜமாணிக்கம், துணைச் செயலாளர் சிங்ஜெகதீசன், மருத்துவ பிரிவு துணைச் செயலாளர் கருணாநிதி மற்றும் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
