Skip to content

மகளிர் உரிமைத்தொகை முன்பணம் 5000-வரவேற்கதக்கது… ஜவாஹிருல்லா

மகளிர் உரிமைத் தொகை முன்பணமாக ரூ.5000 என்ற முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிடும் அறிக்கையில் தெரிவித்ததாவது; ‘மாதாந்திர மகளிர் உரிமைத் தொகை’ பெறும் பெண்களுக்கு முன்பணமாக ரூ.5000 அவர்களின் வங்கிக் கணக்கில் இன்று காலையில் வரவு வைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கை, பெண்களின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கியமான மற்றும் வரவேற்கத்தக்க முடிவாகும்.

வீட்டின் அன்றாடச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, சுகாதாரத் தேவைகள் ஆகியவற்றைச் சமாளிக்கப் போராடி வரும் பெண்களுக்கு, இந்த முன்பணம் உடனடி நிவாரணமாகவும், தன்னம்பிக்கை அளிக்கும் ஆதரவாகவும் அமையும். தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நியாயமான நிதிகளைத் தர மறுக்கும் ஒன்றிய அரசு மகளிர் உரிமைத் தொகையையும் தேர்தலைக் காரணம் காட்டி முடக்குவதற்கு முன்னெடுப்புகளைச் செய்து வரும் நிலையில் அதனை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை மெச்சத்தக்கது.

குறிப்பாக அடுத்து வரும் மாதங்கள் கோடைக் காலம் மற்றும் பள்ளிக்கூடக் கட்டணம் செலுத்தும் காலம் என்பதைக் கவனத்தில் கொண்டு கருணையுடன் முதலமைச்சர் அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி உளமார பாராட்டுகிறது. அடுத்து வரும் திராவிட மாடல் ஆட்சி 2.0 வில் மகளிர் உரிமைத் தொகை ரூ2000 ஆக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியையும் மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!