திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா கோட்டாநத்தம் ஊராட்சி
ஆதிபுரத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆதிபுரத்திலிருந்து ரெங்கபாளையம்புதூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாககடந்த7 ஆண்டுகளாக
போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் நிலையில் உள்ளது.இச்சாலையை சீரமைத்து
புதிய தார் சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள்,
அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பலமுறை புகார் செய்தும் புதிய தார்
சாலை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்
திட்டம் 2025 – 2026 கீழ் ரூ.96.40 லட்சம் மதிப்பீட்டில் 2 1/2 கிலோ மீட்டர் தூரத்திற்கு
கடந்த 24.09.2025ம் தேதி சாலை பணி தொடங்கி 6 மாதத்தில் அமைக்கப்பட்டதாக
விளம்பர பலகையை குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் வைத்து
விட்டு சென்றனர். ஆதிபுரத்தில் சாலை அமைக்காமல் வெறும் விளம்பரப் பலகையை மட்டும்
வைத்து சென்றதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

