Skip to content

திருச்சியில் ரூ.1500 லஞ்சம் பெற்ற ஏஇஓ கைது..

திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியை பணிபுரிந்துள்ளார். தற்போது பணிமாறுதலில் வேறு பள்ளிக்கு கடந்த ஜுலை மாதம் சென்றுவிட்டார். ஜுலை மாதத்தில் பள்ளி ஆசிரியை 4 நாட்கள் பணிபுரிந்தைமக்காக ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளார். மபள்ளி ஆசிரியை அந்த 4 நாட்களுக்கான ஊதியத்தை பெற வந்துள்ளார். 4 நாட்கள் ஊதியம் கொடுப்பதற்கு சான்று கேட்டு, வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா பேபியை சந்தித்துள்ளார். அப்போது சான்று வழங்க ரூ.1,500/- லஞ்சம் கேட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக 15.12,2025ந் தேதி ஆசிரியை விமலா திருச்சி ஊழல் தடுப்பு பிரிவில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று 15.12.2025ந்தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வட்டார அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது வட்டார கல்வி அலுவலர் லதா பேபி ரூ.1,500/-ஐ விமலாவிடமிருந்து லஞ்சம் பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக சிக்கினார். இது தொடர்பாக திருச்சி நகர, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

error: Content is protected !!