Skip to content

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்; 250 பேர் பலி..!

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், சுமார் 250 பேர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு 11:47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் அஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் நூர் குல், சோகி, வாட்பூர், மனோகி மற்றும் சபதரே மாவட்டங்களில் குறைந்தது 250 பேர் பலியானதாகவும், 500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் குனார் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!