ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நடந்த வான்வழித் தாக்குதலில் மூன்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்
பாகிஸ்தான் ராணுவம், ஆப்கானிஸ்தானின் கிழக்கு பக்டிகா மாகாணத்தின் உர்குன் மாவட்டத்தில் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் மொத்தம் எட்டு முதல் பத்து பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் மூவர் உள்ளூர் கிரிக்கெட் வீரர்கள் — கபீர் (Kabeer), சிப்கத்துல்லா (Sibghatullah), மற்றும் ஹாரூன் (ஹாரூன்) ஆவர்.
அவர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக உர்குனிலிருந்து ஷரானாவுக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது தாக்குதல் நடந்தது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த தாக்குதல் குறித்து பேசியதாவது, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (ACB) இந்த தாக்குதலை “கோழைத்தனமானது” எனக் குறிப்பிட்டு மூன்று வீரர்களின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், இது அமைதி முயற்சிகளுக்கு பெரிய பின்னடைவாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கையுடனான டி20 தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.