Skip to content

கடைக்கு லைசென்ஸ்… ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒருவர், முதுகுளத்தூரில் கடந்த மாதம் புதிதாக உரிமம் பெற்று பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் அந்த நபரின் கடைக்கு வந்து, நான்தான், உனக்கு உரிமம் கொடுத்த அதிகாரி. எனக்கு அலுவலக செலவுக்கு ரூ.15 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். பின்னர் 2 நாட்களுக்கு முன்பு வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் கடைக்காரருக்கு போன் செய்து ரூ.15 ஆயிரத்தை கேட்டுள்ளார்.

பேரம் பேசியதில் கடைசியாக ரூ.8 ஆயிரம் தருமாறு கூறியுள்ளார். இதுகுறித்து கடைக்காரர், ராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார். போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரசாயனம் தடவிய ரூ.8 ஆயிரத்தை வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று கேசவராமனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமனை கைது செய்தனர்.

error: Content is protected !!