தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பது குறித்து, இன்று சென்னை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக்கூட்டம் நடத்தினார். அதைத்தொடர்ந்து மின் இணைப்புடன் ஆதார் இணைக்க மேலும் 15 நாள் அவகாசம் அளிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க டிசம்பர் 31 கடைசிநாள் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அது ஜனவரி 31 வரை நீடிக்கப்பட்ட நிலையில் இப்போது மேலும் 15 நாள் அவகாசம் கொடுத்து மின்வாரியம் அறிவித்து உள்ளது. அதன்படி வரும் பிப்ரவரி 15ம் தேதிவரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.