Skip to content

கல்வியில் AI: பிரதமர் மோடி வலியுறுத்தல்

வளர்ச்சித் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்துவது குறித்த பட்ஜெட்டிற்குப் பிந்தைய இணையவழி கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர் விரிவாகப் பேசினார்.

கல்வித் துறையைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு (AI), ஆட்டோமேஷன், டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் வடிவமைப்பு சார்ந்த உற்பத்தி போன்ற நவீன பாடங்களில் நமது கவனம் அதிகம் இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்தியாவின் கல்வி முறையை உலகப் பொருளாதாரத்துடன் இணைக்கும் பணிகளை மேலும் விரைவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரத் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்துப் பேசிய அவர், கடந்த சில ஆண்டுகளில் நாட்டின் சுகாதாரக் உள்கட்டமைப்பு பெருமளவில் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நூற்றுக்கணக்கான மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டிருப்பதையும், ஆயுஷ்மான் பாரத் மற்றும் ஆரோக்கிய மந்திர்கள் போன்ற திட்டங்கள் மூலம் சுகாதாரச் சேவைகள் கடைக்கோடி கிராமங்கள் வரை சென்றடைந்திருப்பதையும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியா தற்போது கண்டுபிடிப்புகள் சார்ந்த பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்களின் விடாமுயற்சியே நாட்டின் மிகப்பெரிய பலம் என்றார். கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் புதிய சாதனைகளைப் படைக்க விரும்பும் ஆர்வம், இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.

error: Content is protected !!