பாஜக கூட்டணி வேண்டாம் என்று கூறிய கட்சிகள் தற்போது கூட்டணிக்கு தவம் கிடப்பதாக கூறியிருந்தார் நேற்று அண்ணாமலை. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டியில் கூறியதாவது… அதிமுக தொடங்கப்பட்டது முதல் யாருடனும் கூட்டணி வைக்க தவம் கிடந்ததாக சரித்திரம் கிடையாது. பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக உள்ளது. கூட்டணிக்கு தவம் கிடப்பதாக அதிமுகவை குறிப்பிட்டு அண்ணாமலை பேசவில்லை. என்று இவ்வாறு தெரிவித்தார்.
கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை…. எடப்பாடி பழனிசாமி…
- by Authour
