Skip to content

ஜெயலலிதா படத்திற்கு திருச்சி தெற்கு அதிமுக மரியாதை

  • by Authour

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார் தலைமையில்
பெல் அண்ணா தொழிற்சங்க வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி மற்றும்

நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மற்றும் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட துணைச் செயலாளர் .சுபத்ரா தேவி, ஒன்றிய செயலாளர்கள் ராவணன் எஸ்.கே.டி.கார்த்திக், நகர கழக செயலாளர் எஸ்.பி.பாண்டியன், பகுதி கழகச் செயலாளர்கள் எம்.பாலசுப்பிரமணியன், எஸ்.பாஸ்கர் என்கிற கோபால் ராஜ், தண்டபாணி, பேரூர் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சூரியூர் ராஜா என்கிற ராஜமணிகண்டன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காசிராமன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் பகுதி கழக நிர்வாகிகள் தொழிற்சங்க சகோதரர்கள்மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் கழக செயல்வீரர்கள் வீராங்கனைகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!