Skip to content

ஜல்லிக்கட்டில் இறந்தால் ரூ.10 லட்சம்… அதிமுக வாக்குறுதி

சென்னை, ராயப்பேட்டையில் அதிமுக 2ம் கட்ட தேர்தல் அறிக்கையை வௌியிட்டார் எடப்பாடி பழனிசாமி- நிருபர்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது..

சிறுபான்மையின மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

ஆண்டுக்கு 3 எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யப்படும்.

ரேசன் அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டில் உயிரிழக்கும் வீரர்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கப்படும். படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகள் அறிவிக்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டியில் பலத்த காயமடையும் வீரர்களுக்கு ரூ. 2லட்சம் வழங்கப்படும்.

ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். முதியோர் உள்ளிட்டோர் ஓய்வூதியம் ரூ. 2000 ஆக அதிகரிக்கப்படும்.

கூட்டணி அமைக்க தடுமாறுவதாக முதலமைச்சர் கூறினார். தற்போது பலமான கூட்டணியை அமைத்துவிட்டோம்.
கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை என அமித்ஷாவே தௌிவுபடுத்திவிட்டார்.

கூட்டணிக்கு எந்தக்கட்சி தலைமை என்றே விஜய்க்கு தெரியவில்லை. விஜய் மக்களையும், பார்ப்பதில்லை, தொலைக்காட்சியையும் பார்ப்பதில்லை.

செய்தியாளர்களைச் சந்தித்தால்தான் களநிலவரம் விஜய்க்கு புரியும்.
ஜெயலலிதாவை ரோல் மாடலாக ஏற்ற விஜய், அதிமுகவை எப்படி ஊழல் கட்சி என கூறுகிறார்.

சசிகலா விவகாரம் முடிந்துபோன விஷயம். மீண்டும் மீண்டும் சசிகலா விவகாரம் குறித்துகேட்க வேண்டாம் என்று இவ்வாறு தெரிவித்தார்.

error: Content is protected !!