அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கைளை மீண்டும் சேர்க்க வேண்டுமென ஈபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இந்நிலையில் டில்லி பயணத்தை முடித்துக்கொண்டு தமிழகம் திரும்பிய செங்கோட்டையன். கோவையில் செங்கோட்டையன் கூறியதாவது… அதிமுக வலிமை பெற ஒருங்கிணைந்து பணியாற்றுவேன். டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்தேன். எல்லோரும் ஒன்றிணைய வேண்டும். அதிமுக வலுவடைய வேண்டும் என அமித்ஷாவிடம் கூறினேன். அரசியல் சூழல் குறித்த கருத்துகளை பரிமாறிக்கொண்டோம் என்று இவ்வாறு தெரிவித்தார்.
அதிமுக ஒன்றிணைய வேண்டும்..அமித்ஷாவிடம் கூறினேன்.. செங்கோட்டையன்
- by Authour
