அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இதுவரை தமிழ்நாட்டில் ரூ. 148 கோடி வசூல் செய்துள்ளது. இந்நிலையில் கார் ரேஸ் மீது அஜித்துக்கு இருந்த தீராத காதலால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி ரேஸில் கவனம் செலுத்த போவதாக கூறியிருந்தார். கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபடும் போது பலமுறை விபத்து ஏற்பட்டு மயிரிழையில் உயிர் தப்பினார். ஆனாலும் தைரியமாக ரேஸில் பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஸ்பெயினில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித் அணி இந்த மாதம் இரண்டு அடுத்த மாதம் இரண்டு என 4 போட்டிகளில் பங்கேற்கிறது. ஸ்பெயினின் பிரெஸ்டிஜியஸ் சர்க்யூட் டி பார்சிலோனாவில் (செப்.,28) நடந்த கன்ஸ்ட்ரக்டர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்தின் அணி, 3ம் இடம் பிடித்து சாதித்துள்ளது. ‛அஜித்குமார் ரேஸிங்’ அணி தொடர்ந்து கார் பந்தயங்களில் சாதித்து வருவதுடன், இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அஜித் அணி 3ம் இடம் பிடித்த செய்தியை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.