நடிகர் அஜித்குமார், தனது மகனுடன் கார் ரேஸ் பந்தய மைதானத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், பிரபல கார் ரேஸர் நரேன் கார்திகேயனிடம் அஜித்குமாரின் மகன் ஆத்விக் பேசும் புகைப்படம் அஜித்குமார் ரேஸிங் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆத்விக் குட்டி ரேஸ் காரில் அமர்ந்திருக்க அவருக்கு பக்கத்தில் அஜித்குமார், ஷாலினி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. ஆத்விக்கிற்கு அஜித் கார் ரேஸ் பயிற்சி அளித்து வரும் இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.