மத்திய அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் சட்ட திருத்த தொகுப்பை திரும்ப பெற வேண்டும்.முறைசாரா தொழிலாளர்களின் நல வாரிய பணத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் திருச்சி மரக்கடை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப் குணசேகரன் ,
சிஐடியு. ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ், எஸ்கேஎம். அயிலை சிவ சூரியன், ஏஜ சசிடியு ஞான தேசிகன், எல்.எல்.எப்.தெய்வீகன், யுடியுசி சிவசெல்வன், ஜஎன்டியுசி அலெக்ஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.டி.யூ.சி,எல்.பி.எஃப், ஐ.என்.டி.யூ.சி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

