சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அன்புமணி தரப்பு பாமக, அதிமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதற்கு, ராமதாஸ் தரப்பு பாமகவினர் கடும் அதிருத்தியில் உள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கூறுகையில், “இபிஎஸ்க்கு என்ன அழுத்தம் என தெரியவில்லை. அன்புமணியுடன் கூட்டணி வைப்பவர்கள் ஏமாந்துதான் போவார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து இன்னும் சில நாட்களில் ராமதாஸ் அறிவிப்பார்” என்றார்.

