Skip to content

”அமரன்” இன்று வௌியானதுபோல் இருக்கு-சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி

  • by Authour

கோவாவில் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் கோல்டன் பீகாக் விருதுக்கு ‘அமரன்’ திரைப்படம் முன் மொழியப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 3 படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ‘அமரன்’ திரைப்படமும் நேற்று கோவாவில் நடைபெறும் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் திரையிடப்படது. இதில் நடிகர் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்

இந்நிலையில் விழாவை முடித்து நடிகர் கமலஹாசன் நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை வந்தனர் அவர்களுடன் நடிகை குஷ்புவும் விமான நிலையத்தில் ஒன்றாக வந்தார்

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்…ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் அதுவும் நம்ம ஊர்ல நடக்குற போது நம்ம நடிச்ச படம் ஸ்கிரீன் ஆயிருக்கு செம்ம அப்ரிஷேஷன் இருக்கு படம் வந்து ஒரு வருடம் ஆனாலும் எனக்கு இன்று வெளியானது போல் உள்ளது

error: Content is protected !!