Skip to content

அம்பேத்கர் நினைவு தினம்- முதல்வர் ஸ்டாலின் X-தள பதிவு

  • by Authour

அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் X-தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது போராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் அம்பேத்கர் எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!