ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் கூறியதாவது:- ஆம்புலன்ஸ் பணியாளர்கள் தாக்கப்படுவது ஏற்கத்தக்கது அல்ல. ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், வழக்குப்பதிவு செய்ய வேண்டும். எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், சமூக அமைப்பாக இருந்தாலும் ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும்.
பொதுக்கூட்டங்களில் மக்கள் அதிகமாக இருந்தாலும் ஆம்புலன்சுக்கு வழிவிட வேண்டும். அனைத்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குவது சாத்தியமா?. ஆம்புலன்ஸ்க்கு வழி விடாமல் வழிமறித்து தாக்கினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆம்புலன்ஸ் பணியாளர் தாக்கப்பட்டது தொடர்பாக எடுத்த நடவடிக்கை பற்றி டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை 12-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.