ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாதுகாப்பு கோரிய மனு- தமிழ்நாடு டிஜிபி சுற்றறிக்கையை பின்பற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் முடியும் வரை, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் பணியில் இருக்கும் போது தேவையான போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிடக்கோரிய மனு. அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கக்கூடாது என அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கும் டிஜிபி சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் அரசு தரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆம்புலன்ஸ் உட்பட அனைத்து அவசரகால வாகனங்களும் பொதுக் கூட்டங்கள் நடைபெறும் பகுதிகளில் தடை இல்லாமல் செல்ல முடியும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு உறுதிப்படுத்த வேண்டுமென சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது – அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. டிஜிபியின் சுற்றறிக்கையை பின்பற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.