பாரதிய 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் மாநில செயற்குழு கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நடைபெற்றது. திவாகர் பாரதிய மஸ்தூர் சங்கம் மாவட்ட தலைவர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்ட த்தில் மாநில தலைவர் மற்றும் பாரதிய மஸ்தூர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் சங்கர் ஜி முன்னிலையில் , செந்தில்குமார் மாநில பொதுச் செயலாளர் சிறப்புரை கூட்டம் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 1)வழங்கப்படாத ஊதிய உயர்வு 16 % மேல் வழங்கப்பட வேண்டும்.
2) வருங்கால வைப் நிதி ஆந்திர மாநிலத்தில் பணம் கட்டாமல் தமிழ்நாடு அலுவலகத்தில் தொழிலாளர் பணம் செலுத்த வேண்டும்.
3.) தீபாவளி போனஸ் Rs.15000 வழங்கப்பட வேண்டும்
4.தொழிற்சங்க பணியில் ஈடுபட்டு பணியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி அமர்த்த வேண்டும்
ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
வருகின்ற அக்டோபர் 08 தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும் என தீர்மானிக்கப்பட்டது. ஆகவே ஒத்த கருத்துடைய மாற்றுத் தொழிற்சங்கங்களை ஒருங்கிணைத்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இறுதியில் மாநில அமைப்புச் செயலாளர் திரு ஹரி பிரசாத் மகிழ்வுறை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்