குற்றம் சாட்டப்பட்டு,. 30 நாட்கள் சிறையில் இருந்தால் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பதவி இழக்கும் வகையில் புதிய மசோதாவை மக்களவையில் இன்று உ்ளதுறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். 30 நாட்களுக்குள் ஜாமீனில் வரமுடியாவிட்டால் 31வது நாள் அவரது பதவியை குடியரசு தலைவர் அல்லது கவர்னர் பறிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை தாக்கல் செய்தவுடன் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஒரு எம்.பி. இந்த மசோதா நகலை கிழித்து எறிந்தார்.
வாக்கு திருட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அதை திசை திருப்ப மத்திய அரசு இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்தன.