ரஜினி முடிவு.. குருமூர்த்தியுடன் விடிய விடிய அமித்ஷா ஆலோசனை…

743
Spread the love
தமிழகத்திற்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு விட்டு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் தங்கினார். அங்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதற்கு பிறகு இரவு 8 மணிக்கு மேல் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன், மூத்த தலைவர்கள் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆடிட்டர் குருமூர்த்தி ஆலோசனை நடத்தினார். அமித் ஷா தங்கியிருந்த நட்சத்திர விடுதிக்கு இரவு 11 மணியவில் குருமூர்த்தி சென்றார். பின்னர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக இருவரும் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், நடிகர் ரஜினிகாந்த்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பாகவும் அவர் கூறிய சில தகவல்களை அமித்ஷாவிடம் கூறப்பட்டதாகவும் இது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில பொதுச்செயலாளர் கே.டி.ராகவன் ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் அதிகாலை ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். அதிகாலை 3 மணிக்கே அமித்ஷா தூங்கச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு அமித்ஷா 10.40 மணிக்கு தனி விமானத்தில் டில்லி புறப்பட்டார். 

LEAVE A REPLY