Skip to content

அமமுக துணைப் பொதுச்செயலாளர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்தார்

அ.ம.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரனான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், கழக துணைப் பொதுச்செயலாளர் எஸ்.வி.எஸ்.பி. மாணிக்கராஜா அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பம் வைத்துக்கொள்ளக்கூடாது எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்நிலையில் அமமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள அக்கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் கடம்பூர் மாணிக்கராஜா திமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில்தன்னை இணைத்துக் கொண்டார். பாஜக கூட்டணியில் அமமுக இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அமமுகவில் இருந்து மாணிக்கராஜா நீக்கப்பட்டார். இந்த சூழலில் மேலும் பல அதிருப்தி நிர்வாகிகள் திமுகவில் இணைய உள்ளதாக கூறினார்.

error: Content is protected !!