கேரளாவில் கடந்த சிலநாட்களாக அமீபிக் மூளைக்காய்ச்சல் பலரையும் தாக்கி உயிர்ப்பலி நிகழ்ந்து வருகிறது.சுல்தான்பத்தேரி ரதீஷ், கோழிக்கோடு ஓமசேரியில் 3 மாத ஆண் குழந்தை. மலப்புரம் ரம்லா (52), தாமரசேரியில் 9 வயது சிறுமி ஆகியோர் இந்த மாதம் அமீபிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தனர்.
இந்த நிலையில் மேலும் ஆஸ்பத்திரியில் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த மலப்புரம் மாவட்டம் வாண்டூரை ஷோபனா என்ற பெண் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.ஓரே மாதத்தில் அமீபிக் மூளைக் காய்ச்சலுக்கு 5 இறந்திருப்பது கேரளாவில் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.